அஞ்சலி நாயர் நடிக்கும் 'ட்ரோன்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில் இப்படம் உருவாகி வருகிறது.

அஞ்சலி நாயர் நடிக்கும் 'ட்ரோன்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சென்னை,

ஜிம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் பேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இப்படத்தின் மூன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

ஹாரர், பேண்டஸி கதையில் படம்

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில், மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி உள்ளிட்ட புதிரான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

போஸ்டர்கள் வெளியீடு

வெளியாகியுள்ள போஸ்டர்களில் அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு போஸ்டர் சயின்ஸ் பிக்ஷன் உலகத்தையும், மூன்றாவது போஸ்டர் திகில் நிறைந்த சூனியக்காரி கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

விரைவில் டிரெய்லர்

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி எஸ்.ஆர். இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘ட்ரோன்ஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com