ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த "பிளாஸ்ட்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த "பிளாஸ்ட்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். சுபாஷ் கே ராஜ் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க உள்ளது. அப்பா - மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாக உள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது. இந்த படத்திற்கு கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், அர்ஜுன் நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த படத்தின் டைட்டில் பிளாஸ்ட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com