"திரிஷ்யம் 3" படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'சக்சஸ் டீசர்' வெளியிட்ட படக்குழு

"திரிஷ்யம் 3" படம் இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
"திரிஷ்யம் 3" படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'சக்சஸ் டீசர்' வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

ரூ.250 கோடியை கடந்த ‘திரிஷ்யம் 3’ வசூல்

மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படங்களுள் ஒன்றாக கருதப்படும் திரிஷ்யம் திரைப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லால் மற்றும் மீனா நடித்த இந்த படம் 2013-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடரும் ‘திரிஷ்யம்’ வெற்றிப்பயணம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான அந்த படம் விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றி கண்டது. இதையடுத்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திரிஷ்யம் 3 திரைப்படம் உருவாக்கப்பட்டது.

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே ரூ.50.35 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சக்சஸ் டீசர் வெளியீடு

திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் ‘திரிஷ்யம் 3’, தற்போது உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகவும் இது சாதனை படைத்துள்ளது.

படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு தற்போது ‘திரிஷ்யம் 3’ சக்சஸ் டீசரை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

7 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தாண்டின் அதிகம் வசூலித்த மலையாளப் படம் பட்டியலில் இப்படம் இடம்பிடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com