மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமம்

தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமம்
Published on

சென்னை,

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, ஐதராபாத். ஜெய்ப்பூர், விசாகபட்டினம் உள்ளிட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இந்த வார இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 'கூலி' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இதைத்தவிர, அண்டை மாநிலங்களின் விநியோகிஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com