தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் 'கருடன்' திரைப்படம்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான 'கருடன்' படம் தற்போது 'பைரவம்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் 'கருடன்' திரைப்படம்
Published on

சென்னை,

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்தநிலையில், 'நந்தி' திரைப்படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா 'கருடன்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைரவம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் கதாநாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிகர் சூரியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தை கே.கே.ராதா கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கருடன் படத்தை போலவே இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com