“சந்தோஷ் சுப்ரமணியம்” பட காட்சியை ரீகிரியேட் செய்த ஜெனிலியா - ரவி மோகன்


“சந்தோஷ் சுப்ரமணியம்” பட காட்சியை ரீகிரியேட் செய்த ஜெனிலியா - ரவி மோகன்
x
தினத்தந்தி 26 Aug 2025 6:51 PM IST (Updated: 26 Aug 2025 7:02 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் ‘புரோ கோட்’ படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது.

நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், ரவி மோகனின் தோழி கெனிஷா, ஜெனிலியா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, மணிகண்டன், பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர். மேலும் விழாவில் ஜெனிலியா - ரவி மோகன் இணைந்து நடித்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம் பெற்ற பிரபல காபி ஷாப் சீனை ரீகிரியேட் செய்தனர். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story