ரஜினியின் குட்டி கதை கேட்க ரெடியாகுங்கள்.. லால் சலாம் அப்டேட்

ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ரஜினியின் குட்டி கதை கேட்க ரெடியாகுங்கள்.. லால் சலாம் அப்டேட்
Published on

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டத

இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ரஜினியின் குட்டி கதைக்கு ரெடியாகும் படி குறிப்பிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com