'குட் பேட் அக்லி' - இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் படக்குழு

"குட் பேட் அக்லி" படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது
'Good Bad Ugly' second schedule shooting to happen in Russia
Published on

சென்னை,

அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.

தற்போது, "குட் பேட் அக்லி" படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com