குரு சோமசுந்தரம் நடிக்கும் “பாரிஸ் கபே” படத்தின் டிரெய்லர் வெளியானது

சரஜ் சீலன் இயக்கிய ‘பாரிஸ் கபே’ படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் நடித்துள்ளனர்.
குரு சோமசுந்தரம் நடிக்கும் “பாரிஸ் கபே” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் நடிக்கும் “பாரிஸ் கபே” படத்தின் டிரெய்லர் வெளியானது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்ற அவர், 'ஜோக்கர்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். மேலும் 'ஜெய்பீம்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

குரு சோமசுந்தரம் தற்போது ‘பாரிஸ் கபே’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். காதல் மற்றும் திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை அனுமோல் நடித்துள்ளார். மேலும் விஜய் விஸ்வா மற்றும் அர்ச்சனா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கவனம் பெற்ற படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல்

‘பாரிஸ் கபே’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சரஜ் சீலன் இயக்கியுள்ளார். எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை சதீஷ் ஜி கவனித்துள்ள நிலையில், இசையை கே அமைத்துள்ளார். படத்தொகுப்பை வி.கே. சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ‘பாரிஸ் கபே’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. காதல் மற்றும் மர்மம் கலந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த முன்னோட்டம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘பாரிஸ் கபே’ படத்தின் ‘அழகழகாய் மனம்’ பாடல் சமீபத்தில் வெளியானது.

விரைவில் திரையரங்குகளில் வெளியீடு

இந்நிலையில், ‘பாரிஸ் கபே’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு டிரெய்லரில் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com