ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்

ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் காம்பன் வயது முதிர்வு காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்
Published on

ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் காம்பன். இவர் கடைசியாக வெளியான 6 ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியர் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்து இருந்தார். இந்தப்படம் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர்.

வயது முதிர்வு காரணமாக மைக்கேல் காம்பனுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மைக்கேல் காம்பன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. மைக்கேல் காம்பன் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ரசிகர்களும் ஹாரி பாட்டர் படங்களில் அவர் பேசிய வசனங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஹாரி பாட்டர் பட தயாரிப்பு நிறுவனமும் மைக்கேல் காம்பனின் டம்பில்டோர் கதாபாத்திர புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளது.

மைக்கேல் காம்பனுக்கு முன்பு முதல் இரண்டு ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமை ஆசிரியராக நடித்து இருந்த ரிச்சர்ட் ஹாரிஸ் 2002-ல் மரணம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com