இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? - சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி

இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? என்று சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? - சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி
Published on

சென்னை,

ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

"ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற பெயரைப் பயன்படுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்று சேவாக் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சேவாக்கின் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன்... இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) September 5, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com