ஆரோக்கியம் முக்கியம்... நடிகை சமீரா ரெட்டி, பெண்களுக்கு அறிவுரை

ஆரோக்கியம் முக்கியம்... நடிகை சமீரா ரெட்டி, பெண்களுக்கு அறிவுரை
Published on

தமிழில் சூர்யா ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணம் முடிந்து குழந்தைக்கும் தாயாகி உள்ளார்.

சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டியில், "நான் நடிகையாக இருந்து தாயாகவும் மாறி இருக்கிறேன். உடலின் நிறத்தை வைத்தோ, தலைமுடி நரைத்து விட்டதை வைத்தோ ஒரு மனிதரை மதிப்பீடு செய்வது அநாகரிகம். வெள்ளை முடியையும், தாயான பிறகு வயிற்றின் மீது ஏற்படும் கோடுகளையும் மறைக்கும் முயற்சியை நான் எப்போதும் செய்யவில்லை, பெண்கள் ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் இருக்கும் அனைத்து உணவு பிளானையும் அமல்படுத்தக்கூடாது. முதலில் நாம் நமது உடலோடு பேச வேண்டும். உடல் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொண்டேன். என் அப்பா டிரை புரூட்ஸ் சாப்பிட பழக்கப்படுத்தினார். நானும் என் குழந்தைகளுக்கு அதையே ருசி காட்டினேன்.

நான் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவர்களும் அதே வழியை அனுசரிப்பார்கள். நாம் நொறுக்கு தீனியை விரும்பினால் அவர்களும் அந்த குப்பையோடு வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். பெண்கள் ஆரோக்கியத்தின் மீது குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்'' என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com