நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கதாநாயகிகள்

மாலத்தீவில் மாளவிகா மோகனன் பிகினி உடையில் நின்றபடி எடுத்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிறங்கடிக்கும் கதாநாயகிகள்
Published on

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் நடித்து வரும் கதாநாயகிகள் பலர் தனது கவர்ச்சி தோற்ற படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா, மாளவிகா மோகனன், துஷாரா விஜயன், சான்யா அய்யப்பன், திவ்யபாரதி, சாக்ஷி அகர்வால் உள்பட நீச்சல் உடையில் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.

மாளவிகா மோகனன்:- ரஜினிகாந்துடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். சினிமா நடிப்பை விட சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு வரும் படங்கள் அதிக கவர்ச்சி தோற்றத்தில் அமைந்திருக்கும். சமீபத்தில் மாலத்தீவில் பிகினி உடையில் நின்றபடி எடுத்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமந்தா:- பிரபல நடிகையான சமந்தா அஞ்சான் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிகினி உடையில் நடனமாடினார். சமீபத்தில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

துஷாரா விஜயன்:- சார்பட்டா பரம்பரை, அநீதி, ராயன், வேட்டையன் போன்ற படங்களில் நடித்துள்ள துஷாரா விஜயன் அடிக்கடி பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திவ்யபாரதி:- பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திவ்யபாரதி தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதேபோல சான்யா அய்யப்பன்,திஷாபதானி, மவுனிராய், லட்சுமிராய் உள்பட பலர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com