

சென்னை,
'அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்' (2024) படத்தின் வெற்றிக்கு பிறகு சுஹாஸ் மற்றும் ஷிவானி நகரம் மீண்டும் இணைந்துள்ளனர். அப்படத்திற்கு “ஹே பகவான்” எனப்பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் கோபி அட்சரா இயக்கும் “ஹே பகவான்” படம் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் வெண்ணிலா கிஷோர், அன்னபூர்ணம்மா, அஜய் கோஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஹி ரெட்டி பண்டுகுலா ஒளிப்பதிவு செய்ய விவேக் சாகர் இசையமைக்கிறார்.