நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய இந்தி நடிகை அதிரடி கைது


நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய இந்தி நடிகை அதிரடி கைது
x

தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய இந்தி நடிகை மூன் தாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையை அடுத்த தானேயில் உள்ள காஷிமிரா பகுதியில் நடிகைகளை வைத்து விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அனுஷ்கா மோனி மோகன் தாஸ் என்ற 41 வயது நடிகை இந்த விபசார தொழிலை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாள் மாடல் அழகியான இவர் இந்தி, பெங்காலி சினிமா படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையில் இவர் மூன் தாஸ் என்று அறியப்படுகிறார்.

இந்தநிலையில் போலீசார் போலி வாடிக்கையாளர் மூலம் மூன்தாசை தொடர்பு கொள்ள வைத்தனர். அப்போது மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மிரா ரோடு பகுதியில் இருக்கும் ஒரு மாலுக்கு வந்து தன்னை சந்திக்கும்படி அந்த நடிகை கூறினார்.

அதன்படி போலீசார் அனுப்பிய போலி வாடிக்கையாளர்கள் 2 பேரும் அங்கு சென்று மூன் தாசை சந்தித்தனர். அப்போது உல்லாசம் அனுபவிக்க நடிகைகளை அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் இருந்து மூன் தாஸ் பணம் வாங்கினார்.

இதை அங்கு மறைந்திருந்து கண்காணித்த போலீசார் நடிகை மூன் தாசை கையும், களவுமாக பிடித்தனர். அப்போது அவர் நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். பெங்காலி, தமிழ், தெலுங்கு நடிகைகள், டி.வி. நடிகைகளை அவர் விபசாரத்துக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதற்காக நடிகைகளுக்காக ஏங்கும் செல்வந்தர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு, இந்த விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார். இதைடுத்து மூன் தாசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவரால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 நடிகைகளை போலீசார் மீட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் டி.வி. சிரீயல்கள் மட்டுமின்றி பெங்காலி சினிமாக்களிலும் நடித்து வந்ததாக மிரா- பயந்தர், வசாய்- விரார் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் மதன் பல்லால் தெரிவித்தார்.

நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story