என் கடைசி 3 படங்களை வாழ்க்கை அனுபவத்தில் நடித்தேன்- கெத்து தினேஷ் நெகிழ்ச்சி

கெத்து தினேஷ் நடித்துள்ள தண்டகாரண்யம் படம் வருகிற 19ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டகாரண்யம்'. இந்த படத்தில் கெத்து தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கலையரசன்,பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கெத்து தினேஷ் தனது சினிமா அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.
அதாவது, தனது கடைசி மூன்று படங்களை வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை கொண்டு நடித்தேன் என்று நடிகர் கெத்து தினேஷ் தெரிவித்தார். மேலம், இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜெஸ்டின் பிரமாதமாக இசை அமைத்துள்ளதாகவும், லப்பர் பந்து படத்திற்கு கொடுத்த வரவேற்பை இதற்கும் தர வேண்டும் என்றார். இதேபோல் தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.






