மற்ற படங்களுக்கான கதைகளை எழுத போகிறேன்- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தை தயாரிப்பதில் புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்ற படங்களுக்கான கதைகளை எழுத போகிறேன்- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்
Published on

உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கனடாவைச் சேர்ந்தவர். இவர் திரைப்படத் துறையுடன் மட்டுமல்லாமல் ஆழ்கடல் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் இவர், உலக சினிமாவை மாற்றிய முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக சினிமாவில் சாதனை படைத்தது. அதேபோல் அவதார் திரைப்படமும் ஹாலிவுட் சினிமாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தை தயாரிப்பதில் புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவர உள்ளதாகவும், மேலும் புதிய படத்திற்கான கதை எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, அவதார் திரைப்படங்களின் பிரமாண்டமும், அதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும் அதன் தயாரிப்பு காலத்தை அதிகரிப்பதோடு, பட்ஜெட்டையும் மிகக் கடுமையாக உயர்த்துகிறது. எனவே, அடுத்தடுத்த பாகங்களை இன்னும் திறம்பட உருவாக்குவதற்காக சில புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

வழக்கமாக எடுக்கும் நேரத்தில் பாதியளவிலும், ஒட்டுமொத்த பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு செலவிலும் அடுத்த படங்களை முடிக்க வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கு புதிய தயாரிப்பு முறையை இறுதி செய்ய இன்னும் ஒரு வருட காலம் தேவைப்படும், அதுவரை மற்ற படங்களுக்கான கதைகளை எழுத போகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com