'கவுதமிற்கு நான் ஏற்ற ஜோடியில்லை என்றெல்லாம்...'- மஞ்சிமா மோகன் வருத்தம்

திருமணத்திற்கு முன்பு இவை எல்லாம் என்னை பாதித்ததில்லை என்று மஞ்சிமா மோகன் கூறினார்.
'I am not a suitable match for Gautham...'- Manjima Mohan regretted
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக். இவர்களுக்கு கடந்த 2022ல் திருமணம் நடந்தது. மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், அவரது மாமனார் கார்த்திக்கிற்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் வதந்திகள் பரவின. இந்நிலையில், இந்த வதந்திகள் குறித்து பேட்டியில் மஞ்சிமா கூறியதாவது,

எங்களது திருமணம் நடந்தபோது நிறைய வதந்திகளை இணையத்தில் பார்க்க முடிந்தது. அதாவது, நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானேன் என்றும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் அவரை நாங்கள் ஒருமுறைதான் அழைத்தோம் என்ற ரீதியிலும் பேசினார்கள். இதெல்லாமே கட்டுக்கதைகள்தான். இது எங்கள் வீட்டு திருமணம். அப்படி இருக்கும்போது முறைப்படி அழைக்க வேண்டும் என்பது இல்லை. 

இதில் சில வதந்திகள் எங்கள் குடும்ப உறுப்பினர்களை பாதித்தது என்பது உண்மைதான். பல வதந்திகளை நானும் சந்தித்திருக்கிறேன். திருமணத்திற்கு முன்பு இவை எல்லாம் என்னை பாதித்ததில்லை. ஆனால், திருமணத்திற்கு பின்பு நானும் ஒருக்கட்டத்தில் இதனால் வருத்தமடைந்தேன். குறிப்பாக, கவுதமிற்கு நான் ஏற்ற ஜோடியில்லை என்றெல்லாம் சொன்னார்கள். கவுதம் மிகவும் அன்பானவர் ". இவ்வாறு கூறினார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com