என் காதல் தோல்விகளுக்கு நானே காரணம் - சல்மான் கான்


என் காதல் தோல்விகளுக்கு நானே காரணம்  - சல்மான் கான்
x
தினத்தந்தி 27 Sept 2025 4:26 PM IST (Updated: 27 Sept 2025 4:27 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது தனது விருப்பம் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

மும்பை,

நடிகர் சல்மான்கான் 59 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. 2000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரது வாழ்க்கையில் பல காதல் வந்து சென்றன. ஆனால் எதுவுமே நிலைத்து நிற்கவில்லை. நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் அத்திருமணம் நின்று போனது.

நடிகை கஜோல் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகியோர் இணைந்து நடத்திய டாக் ஷோவில் நடிகர் அமீர் கானும், சல்மான் கானும் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் சல்மான் கானும், அமீர் கானும் தங்களது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை நினைவுகூர்ந்தனர். இதில் சல்மான் கான் தனது பழைய காதல் உறவுகள் குறித்துப் பேசுகையில், “தம்பதிகளில் ஒரு பார்ட்னரை விட மற்றொரு பார்ட்னர் அதிக வளர்ச்சியடையும் போது அங்கு கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன.அங்கு ஒருவர் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்கிறார். எனவே இரு பார்ட்னர்களும் சமமாக வளர வேண்டும்” என்று தெரிவித்தார்.

முந்தைய உறவுகள் குறித்து சல்மான் கானிடம் அமீர் கான் கேட்டபோது, “அது எனக்கு ஒத்து வரவில்லை. அதற்கு யார் காரணம் என்று கேட்டால் நான் தான் அதற்கு காரணமாக இருப்பேன். குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். எனக்கும் ஒரு நாள் குழந்தை பிறக்கும். பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

சல்மான் கானுக்கு மாபியா கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறி, ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story