“என்னைப் புரிந்துகொள்ள என்னாலேயே முடியவில்லை” - தமன்னா

திரையுலகில் கால் பதித்து இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது கிரேஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் தமன்னா.
“என்னைப் புரிந்துகொள்ள என்னாலேயே முடியவில்லை” - தமன்னா
Published on

சென்னை,

தன்னை புரிந்துகொள்ள தன்னாலேயே முடியவில்லை என்று சமீபத்திய ஒரு பேட்டியில் தமன்னா கூறினார்.

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது கிரேஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Also Read
‘குத்தாட்ட நடிகை’ என்ற முத்திரை குத்தி விடுவார்களோ...?- தமன்னா எடுத்த முடிவு
“என்னைப் புரிந்துகொள்ள என்னாலேயே முடியவில்லை” - தமன்னா

இந்நிலையில் ஒரு பேட்டியில் தமன்னா, தன்னை புரிந்துகொள்ள தன்னாலேயே முடியவில்லை என்றார். அவர் பேசுகையில், . “திடீரென கவர்ச்சிக்கு மாறுகிறீர்கள். திடீரென கவர்ச்சிக்கு மறுக்கிறார்கள். உங்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்று என்னை சொல்கிறார்கள். என்னை புரிந்துகொள்ள என்னாலேயே முடியவில்லை. மற்றவர்களால் எப்படி முடியும்?” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com