அதற்கு பயந்துதான் திருமணம் செய்யவில்லை - சல்மான் கான்


அதற்கு பயந்துதான் திருமணம் செய்யவில்லை - சல்மான் கான்
x
தினத்தந்தி 16 Jun 2025 8:19 PM IST (Updated: 23 Jun 2025 7:19 PM IST)
t-max-icont-min-icon

100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் சல்மான்கான் ஆர்வம் காட்டவில்லை.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் சிக்கந்தர் படம் வெளியானது. இந்த படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சல்மான்கான் ராணுவ அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை அபூர்வா லக்கியா இயக்க உள்ளார்.

இதற்கிடையில் நடிகர் சல்மான்கான் வயதாகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. பல 100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சல்மான்கான் 'தி கிரேட் இந்தியன்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான் தனக்கு இருந்த விவாகரத்து பயம் திருமணத்திற்கு ஒரு தடையாக இருப்பதாக பேசினார். இதனால் 59 வயதிலும் தனிமையில் இருக்க முடிவு செய்தது பற்றியும் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

1 More update

Next Story