திருமணமே வேண்டாம்.. சிங்கிளாகவே இருந்து விடலாம் என நினைத்தேன்- விசித்ரா

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மிகவும் சவாலாக மாறியது என்று நடிகை விசித்ரா கூறியுள்ளார்.
தமிழ் திரை உலகில் கவர்ச்சி மற்றும் குணசித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விசித்ரா. திருமணமாகி 3 மகன்கள் அவருக்கு இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசித்ரா பேசுகையில், 90 கால கட்டத்தில் நான் சினிமாவில் நடித்து கொண்டிருந்த போது எனக்கு திருமணமாகுமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். சினிமாவில் இருப்பதால் வெளியிடங்களில் வி.ஐ.பி. மரியாதை கிடைக்கும். ஆனால் குடும்பத்தில் கிடைக்கும் மரியாதை தான் முக்கியம். திருமணமே வேண்டாம். சிங்கிளாகவே இருந்து விடலாம் என நினைத்தேன்.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மிகவும் சவாலாக மாறியது. சவால்களை கடந்து வந்த திருமண வாழ்க்கையை என்னால் விவரிக்க முடியவில்லை. உங்களுக்கு அன்பு காட்டும் கணவரும், குழந்தைகளும் ரொம்ப முக்கியம். இன்றைக்கு எனது கணவரும், குழந்தைகளும் என்னுடன் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.






