’அதுதான் காரணம்’ - ஆர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை

நடிகையின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’அதுதான் காரணம்’ - ஆர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை
Published on

சென்னை,

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க விருப்பமில்லை என்று நடிகை அபர்ணதி தெரிவித்துள்ளார்.

ஒரு சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், “நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் ஆர்யாவுடன் பயணம் செய்திருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு நல்ல நினைவுகளாக உள்ளது. அதனால் ஒரு ‘பொய்’ கதையை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை. அதனால்தான் அவருடன் படம் பண்ணும் எண்ணம் இல்லை,” என்று கூறினார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read
கலைஞர்களுக்கு விருதுகளே அடையாளம்- நடிகை கீதா கைலாசம்
’அதுதான் காரணம்’ - ஆர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை

"எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அபர்ணதி, அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். அவரது முதல் படமான "ஜெயில்"-ல் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com