

மும்பை,
சல்மான் கான் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் புதிய படமொன்றிலும், நடிகை நயன்தாரா உடன் மற்றொரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், “என் வாழ்நாளில் நான் ஒரு திரைக்கதையைக் கூட முழுமையாகப் படித்ததில்லை. நான் திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. முழு ஸ்கிரிப்ட்டை வாசிப்பதை விட, கதையின் மையக்கரு என்ன, அதை எப்படி எடுக்கப் போகிறார்கள், அதன் கமர்ஷியல் மதிப்பு என்ன என்பதையே கவனிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகமாக சிந்திப்பதைத் தவிர்க்கவே விரிவான திரைக்கதை வாசிப்புகளைத் தவிர்ப்பதாகவும், அதேசமயம் தனது சொந்த கதைகள் மற்றும் யோசனைகளை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாகவும் சல்மான் கான் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.