"ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடித்துள்ளேன்"- இயக்குநர் வெற்றிமாறன்

ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடித்துள்ளேன என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
"ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடித்துள்ளேன்"- இயக்குநர் வெற்றிமாறன்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது,

இதயம் மட்டும் எப்போதும் பிறப்பதற்கு முன்னரே துடிக்கத் தொடங்கி விடுகிறது. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமே பிட்னெஸ் கிடையாது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாளுக்கு 70 சிகரெட் பிடிப்பேன்.

இயக்குநராக இருக்கும் போது 150 சிகரெட் வரை பிடிப்பேன். இது தவறு என உணர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைபடி அதை விட்டு விட்டேன். எனது படங்களில் இனி புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருவதை முடிந்த அளவு தவிர்ப்பேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com