``அந்த பையனின் ஆசை போலவே எனக்கும் இருக்கு...'' - மம்மூட்டி உருக்கம்

சமீபத்தில் 'யூத்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் சின்னத் தமிழா பேசியதை மம்மூட்டி சுட்டிக்காட்டினார்.
``அந்த பையனின் ஆசை போலவே எனக்கும் இருக்கு...'' - மம்மூட்டி உருக்கம்
Published on

கொச்சி,

மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி, 'யூத்' படத்தில் நடித்திருந்த சின்னத் தமிழாவின் சினிமா ஆர்வத்தைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள பான் இந்திய திரைப்படமான 'பேட்ரியாட்' மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டார். அதில் சமீபத்தில் 'யூத்' (Youth) திரைப்படத்தின் வெற்றி விழாவில் சின்னத் தமிழா பேசியதை மம்மூட்டி சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில்,

Also Read
"என் வாழ்க்கையை மாற்றிய படம் பொல்லாதவன்" - நடிகர் தனுஷ்
``அந்த பையனின் ஆசை போலவே எனக்கும் இருக்கு...'' - மம்மூட்டி உருக்கம்

"சமீபத்தில் 'யூத்' திரைப்படத்தின் வெற்றி விழா பேச்சைக் கவனித்தேன். அதில் ஒரு நடிகர் தான் சினிமாவுக்கு வர பட்ட கஷ்டங்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தபோது அடைந்த பரவசத்தைப் பகிர்ந்து கொண்டார். அது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சினிமா மீதான அந்த இளம் நடிகரின் ஆர்வம், இன்று வரை எனக்கும் அப்படியே இருக்கிறது." என்றார்.

'யூத்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் சின்னத் தமிழா, தனக்குத் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது சந்தித்த அவமானங்கள் மற்றும் தனது தந்தை தன்னைப் பற்றித் தவறாக நினைத்தது குறித்துக் கண்கலங்கிப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com