நயன்தாராவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை - நடிகர் கவின்

கவின்-நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நயன்தாராவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை -  நடிகர் கவின்
Published on

நடிகர் கவின் தான் நடிகை நயன்தாராவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை என்று பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். இவர் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். அதன்பின், கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு ‘லிப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘ஸ்டார்', 'கிஸ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘ஹாய்’ படம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

அனிருத் குரலில் ‘ரசகுல்லா’ பாடல்

ஜென் மார்டின் இசையமைப்பில், விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய 'கண்ணக்குழியா' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவிருந்த ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ‘ஹாய்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரெய்லர் வெளியீடு

கவின்-நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இத்திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவின் “பொதுவாகவே நான் கமெண்ட்ஸ்களை படிப்பதில்லை. ஆனால், இந்தப் படத்தின் அறிவிப்பின்போது ஒருவர் 'சீரியலில் நடித்திருந்த கவின் நயன்தாரா நடிப்பான் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டான்' என கமெண்ட் செய்திருந்தார். சீரியல்களை விடவும் நான் திரைப்படங்களை பார்ப்பதற்கே விரும்புவேன். அதிலும் நயன்தாராவின் ‘யாரடி நீ மோகினி’ படத்தை பார்த்திருக்கிறேன். திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். தியேட்டரில் ‘யாரடி நீ மோகினி’ படத்தினை நானும் எனது நண்பர்கள் 23 பேரும் பார்த்தோம். நிச்சயமாக அந்த கவின் நயன்தாரா உடன் நடிப்பாரென நினைத்திருக்கமாட்டான். நயன் தாரா உடன் நடிப்பது என்பது எனது பக்கெட் லிஸ்ட்டில் கூட இல்லை. பக்கெட்டுக்கு வெளியே இருக்கிறது. நாமும் நன்றாகத்தான் உழைத்திருக்கிறோம் போல் என நினைத்துக்கொண்டேன்” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com