'இந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை' - பாபி தியோல்


I never expected such a grand Telugu debut- Bobby Deol
x

தற்போது, தெலுங்கில் ’ஹரி ஹர வீர மல்லு’ படத்திலும் தமிழில் ’தளபதி 69’ படத்திலும் பாபி தியோல் நடித்து வருகிறார்.

சென்னை,

பாலிவுட் சினிமாவில் வில்லன் கதாபாத்தில் நடித்து வருபவர் பாபி தியோல். இவர் தற்போது தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். அதன்படி, கடந்த வாரம் வெளியான டாகு மகாராஜ் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், 'டாகு மகாராஜ்' படம் குறித்து பாபி தியோல் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

"டாகு மகாராஜ் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. இவ்வளவு பிரம்மாண்டமான படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை' என்றார்.

இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் மற்றொரு படமான ஹரிஹர வீர மல்லு படத்திலும் தமிழில் தளபதி 69 படத்திலும் பாபி தியோல் நடித்து வருகிறார்.

1 More update

Next Story