நோன்பு கண்ட சமூகத்தின் மாண்புகண்டு மகிழ்கிறேன்- வைரமுத்து

ரம்ஜானை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நோன்பு கண்ட சமூகத்தின் மாண்புகண்டு மகிழ்கிறேன்- வைரமுத்து
Published on

சென்னை,

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரம்ஜானை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"இனிய ரமலானுக்கு

இதய வாழ்த்து

நோன்பு கண்ட சமூகத்தின்

மாண்புகண்டு மகிழ்கிறேன்

ஈகை என்ற பண்பாட்டை

வாழ்க்கை முறையாக

வகுத்துத் தந்தவர்கள்

போற்றுதலுக்குரியவர்கள்

அதைக்

கடைப்பிடிக்கும் சமுதாயம்

ஏற்றுதலுக்குரியது

அகிலப் போர்கள்

ஓயட்டும்

அகந்தையின் தலை

சாயட்டும்

சமாதானத் தென்றல்

வீசட்டும்

சாந்தி மட்டுமே

பேசட்டும்

வாழ்த்தி மகிழ்கிறேன்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com