“நானும் ஒரு சாதாரண மனிதன் தான்..” – மனதை நெகிழச்செய்த நடிகர் மோகன்லால்

துக்கப்படுவதால் என்ன பயன்? நாளை நானும் மறைந்துவிடுவேன் என்று நடிகர் மோகன்லால் உருக்கமாக பேசினார்.
“நானும் ஒரு சாதாரண மனிதன் தான்..” – மனதை நெகிழச்செய்த நடிகர் மோகன்லால்
Published on

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால், இந்திய சினிமாவில் மிகுந்த மரியாதையும் ரசிகர் ஆதரவும் பெற்றவர். 1980களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால், பழைய திரைப்படங்களை பார்க்கும் போது மனம் கனக்கிறது என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “என்னுடைய சில பழைய படங்களை பார்க்கும் போது, என்னுடன் நடித்த பலர் இப்போது உயிருடன் இல்லை என்பதை நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது. அந்த காட்சிகளை பார்க்கும்போது தன்னிச்சையாகவே கண்ணீர் வந்து விடுகிறது, அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது. ஆனால் துக்கப்படுவதால் என்ன பயன்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம். என்னதான் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், நானும் ஒரு சாதாரண மனிதன் தான்,” என்று அவர் உருக்கமாக பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com