"உங்களை மிகவும் மிஸ் செய்வேன் அண்ணா"... உருக்கமாக பதிவிட்ட வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி 'ஜனநாயகன்' படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.

"உங்களை மிகவும் மிஸ் செய்வேன் அண்ணா"... உருக்கமாக பதிவிட்ட வருண் சக்கரவர்த்தி
Published on

சென்னை,

தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த விஜய், அரசியலில் காலடி எடுத்து வைத்ததால், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவருடைய 69-வது மற்றும் கடைசிப்படமான 'ஜனநாயகன்', மிகுந்த எதிர்பார்ப்புக்கும், கடும் போராட்டத்திற்கு மத்தியில் உலகம் முழுவதும் நேற்று (ஜூலை 23) வெளியானது.

தியேட்டர்கள் களைகட்டின

ஏற்கனவே, 'ஜனநாயகன்' இணையத்தில் எச்.டி. தரத்தில் வெளியானதால், தியேட்டர்களில் ஆர்ப்பரிப்பு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால், ரசிகர்கள் படை பலத்தால், ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. என தியேட்டர்கள் களைகட்டின.

உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' திரைப்படம் 7 ஆயிரத்திற்கு அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளிவந்தது. ஆக்சன் அதிரடியில் ரசிகர்களை திருப்திபடுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.78 கோடி முதல் ரூ.80 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்களை மிகவும் மிஸ் செய்வேன்!

இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 'ஜனநாயகன்' படத்தை பார்த்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விஜயுடன் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதனுடன் "அண்ணா" என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், 'ஜனநாயகன்'!! என்னவொரு அற்புதமான விடைபெறும் திரைப்படம்!! இதன் ஒவ்வொரு பகுதியையும் நான் மிகவும் ரசித்தேன்!! ரசிகர்களைக் கொண்டாடும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் படத்திற்காக எச்.வினோத் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்!!

அண்ணா, இத்தனை ஆண்டுகளுக்கும் நன்றி!! 'காதலுக்கு மரியாதை' படத்திலிருந்தே நான் உங்கள் ரசிகனாகிவிட்டேன்!! என் சிறுவயதுப் பருவத்தின் ஒரு முக்கிய அங்கமாக நீங்கள் இருந்தீர்கள்!! உங்களை மிகவும் மிஸ் செய்வேன்!! என்று அதில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com