விவாகரத்து கிடைக்கும் வரை படத்தில் நடிக்கப் போவதில்லை - நடிகர் ரவி மோகன்

எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை என்று நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.
விவாகரத்து கிடைக்கும் வரை  படத்தில் நடிக்கப் போவதில்லை  -  நடிகர் ரவி மோகன்
Published on

சென்னை,

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கெனிஷாவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் சோர்ந்துவிட்டேன்” என்று கூறி கெனிஷா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரவி மோகன் “எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை. என்னை சீண்டி பார்க்காதீர்கள். இனி நான் சாது கிடையாது. விவாகரத்து கிடைக்கும் வரை படத்தில் நடிக்க போவதில்லை. என்னால் நடிக்க முடியவில்லை; எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை. இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை.

இப்ப என்னை நானே வருத்திக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்களுக்கு இதுதான் வேணும். அவங்களுக்கு நான் உயிரோட இருக்க கூடாது. ஒரு மனுஷனுக்கு கஷ்டம் வரும் போதுதான் நல்ல நண்பர்கள் யாருனு தெரியும். நல்ல நண்பர்கள் கூட இருப்பாங்க. அப்படி கூட நின்ன பொண்ணுதான் கெனிஷா. நான் என்ன அழகுல மயங்கி போயிட்டேனா? நான் பார்க்காத ஹீரோயினா? என் வேலையே அழகான பொண்ணுங்களோட நடிக்கறதுதான்” என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com