பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் மரணம் - திரை உலகினர் இரங்கல்

பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் மரணம் - திரை உலகினர் இரங்கல்
Published on

சென்னை ,

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தின் பாடல் மூலம் பிரபலமான பாடலாசிரியர் லலிதானந்த் உடல்நலக்குறைவு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 47. அவரது மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான லலிதானந்த் ரௌத்திரம், மாநகரம், காஷ்மோரா, ஜூங்கா, திருமணம், அன்பிற்கினியாள் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் லலிதானந்த்தின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com