குறிப்பிட்ட வயதுக்கு பிறகு கவனமாக இல்லாவிட்டால் வம்பு - சிம்பு

சைவத்துக்கு மாறிவிட்டதாக நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு கவனமாக இல்லாவிட்டால் வம்பு -  சிம்பு
Published on

குழந்தை நட்சத்திரமாக புகுந்து, தற்போது முன்னணி நடிகராக ஜொலிப்பவர் சிம்பு. பல சர்ச்சைகளுக்கும், புகார்களுக்கும் ஆளானவர் சிம்பு. ஆனாலும் தன் மீதான விமர்சனங்களை மாற்றிக்காட்டி வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனாவுக்கு முன்பாக உடல் எடை அதிகரித்த சிம்பு, போராடி எடையை குறைத்தார். இப்போதும் எடையை கட்டுப்பாட்டில் வைக்க சிரமப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “அசைவம் சாப்பிட்டால் உடல் மந்தமாகிறது. எனவே சைவத்துக்கு மாறிவிட்டேன். தற்போது உடல் லேசாக இருப்பதாக உணருகிறேன். ஒரு குறிப்பிட்ட வயது வரை நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் ஒரு வயதுக்கு பிறகு நாம் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வம்புதான்.எனக்கு சாதம் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துகிறது. எனவே நான் முதலில் காய்கறி சாப்பிட்டு விட்டு அதன்பிறகு சாதம் சாப்பிடுகிறேன். எடையை குறைத்தாலும், அதை கட்டுப்பாட்டில் வைக்க போராடுகிறேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com