இளையராஜாவின் 83வது பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

ரசிகர்களின் வருகையால் இளையராஜாவின் ஸ்டுடியோ பகுதி விழாக்கோலம் பூண்டது.
இளையராஜாவின் 83வது பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
Published on

சென்னை,

இசைஞானி இளையராஜாவின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இசை ஸ்டுடியோவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அதிகாலை முதலே ரசிகர்கள் வருகை தந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடி, இளையராஜா இசையமைத்த மறக்க முடியாத பாடல்களை பாடி அவரது பிறந்தநாளை கொண்டாடினர். மேலும், அவரது இசைப் பயணத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து உற்சாக முழக்கங்களையும் எழுப்பினர். ரசிகர்களின் வருகையால் இளையராஜாவின் ஸ்டுடியோ பகுதி விழாக்கோலம் பூண்டது. தமிழ் திரையிசையில் அழியாத முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களிலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள்

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளைப் படைத்துள்ள இவர், 8,600-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com