"இளமை இதோ இதோ..." - இணையத்தில் டிரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ

இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இளமை இதோ இதோ..." - இணையத்தில் டிரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ
Published on

சென்னை,

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா, 'இளமை இதோ இதோ' என்ற பாடலை பாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் பாட்டு பாடி இளையராஜா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கமல் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற 'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்' என்ற பாடலை இசைஞானி இளையராஜா பாடி வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரைப்படங்களில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் எத்தனையோ பாடல்கள் வந்து விட்ட போதிலும் கடந்த 1982-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் திரைப்படத்தின் 'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்' பாடல் இன்றைய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com