இளையராஜாவின் ‘வேலியண்ட்’ சிம்பொனி ரிலீஸ் அப்டேட்

இளையராஜாவின் ‘வேலியண்ட்’ சிம்பொனி அனைத்து ஆடியோ தளங்களிலும் வரும் ஜூன் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் ‘வேலியண்ட்’ சிம்பொனி ரிலீஸ் அப்டேட்
Published on

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் கடந்த 2025ம் ஆண்டு லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட் என்னும் தலைப்பில் தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதனை தொடர்ந்து புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து துபாயில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இதன்மூலம் இளையராஜா பெற்றார். இதனைத் தொடர்ந்து, தனது ரசிகர்கள் கேட்பதற்காக சிம்பொனி இசையை இளையராஜா சென்னையில் வருகிற மே 30 ம் தேதி அரங்கேற்றம் செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். "FROM RAJA WITH LOVE" என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளனர். அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், பொதுவெளியில் அவரது சிம்பொனி இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இளையராஜாவின் 'வேலியண்ட்' சிம்பொனி அனைத்து ஆடியோ வெளியீட்டுத் தளங்களிலும் வருகிற ஜூன் 1 அன்று வெளியாகும் என அவரது இசை நிகழ்ச்சிகளை நடத்தும் மெர்குரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com