பிரபாஸ் அனுப்பிய ஸ்பெஷல் பரிசு…நடிகை இமான்வி நெகிழ்ச்சி

பிரபாஸ் தற்போது “பௌஜி” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரபாஸ் அனுப்பிய ஸ்பெஷல் பரிசு…நடிகை இமான்வி நெகிழ்ச்சி
Published on

ஐதராபாத்,

திரைப்படங்களில் தனது கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்துவரும் பிரபாஸ், இணை நடிகர்களிடம் காட்டும் அன்பான நடத்தை காரணமாகவும் திரையுலகில் பாராட்டுகளை பெற்றுவருகிறார். தற்போது அதை அனுபவித்திருப்பவர் நடிகை இமான்வி.

பிரபாஸ் தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் “பௌஜி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். காதல்-ஆக்‌சன் படமான இதில், பிரபாஸ் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இமான்விக்கு பிரபாஸ் சிறப்பு உணவு ஹாம்பரை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த அன்பான செயல் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இமான்வி, பிரபாஸின் பெருந்தன்மை மற்றும் இணை நடிகர்களை மதிக்கும் பண்பை பாராட்டினார்.

Also Read
பாப்டா விருது வென்ற முதல் இந்தியப் படம் - மணிப்பூரின் 'பூங்' சாதனை
பிரபாஸ் அனுப்பிய ஸ்பெஷல் பரிசு…நடிகை இமான்வி நெகிழ்ச்சி

படப்பிடிப்பு தளத்தில் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அனுப்புவது பிரபாஸின் வழக்கமாகும். இந்த பண்பு, திரையுலகில் அவருக்கு தனி மரியாதையை பெற்றுத்தந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com