

கோவை,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பெத்தி'. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இதில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதற்கிடையில், இந்த படத்திற்கான படத்துக்காக சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்த சிகிச்சையை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள ராம்சரண் விமானம் மூலம் கோவை வந்தார். அவருடன் அவரது தந்தையான பிரபல நடிகர் சிரஞ்சீவியும் வந்திருந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள ராம் சரணுக்கு இன்று(திங்கட்கிழமை) கை மணிக்கட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அறுவை சிகிச்சை முடிந்ததும், டாக்டர்க ளின் அறிவுறுத்தல்படி அவர் சில நாட்கள் ஓய்வெடுப்பார் என தெரிகிறது.