ஈரான் தாக்குதல்: துபாயில் உள்ள அஜித்தின் நிலைமை என்ன? - மேலாளர் விளக்கம்

துபாயின் பல இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதல்: துபாயில் உள்ள அஜித்தின் நிலைமை என்ன? - மேலாளர் விளக்கம்
Published on

துபாய்,

ஈரான் தாக்குதல் நடத்தி வரும் துபாய்க்கு கார்பந்தயத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நடிகர் அஜீத் குமார் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மூண்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்களை தகர்க்கும் வகையில் துபாயின் பல இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பலர் துபாயில் சிக்கி உள்ளனர்.

இதற்கிடையே, துபாயிலுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியும் விரைவில் அவர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.

Also Read
துபாயில் சிக்கிய நடிகை...பிரதமர் மோடியிடம் உதவி கேட்டு பதிவு
ஈரான் தாக்குதல்: துபாயில் உள்ள அஜித்தின் நிலைமை என்ன? - மேலாளர் விளக்கம்

இந்த நிலையில், துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். துபாயில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் நலமாக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com