போர் தொழில் இயக்குநருடன் மீண்டும் இணைகிறாரா அசோக் செல்வன்?

போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
போர் தொழில் இயக்குநருடன் மீண்டும் இணைகிறாரா அசோக் செல்வன்?
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.

அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுகளை குவித்தது.

திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தளித்த இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வரை வசூலித்து 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 10-வது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்துக்காக இணைகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இந்த படம் அவர்களின் முதல் படமான போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com