மூடப்படுகிறதா 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சேனல்?

'கார்ட்டூன் நெட்வொர்க்' சேனல் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Is Cartoon Network Closing Down?
Published on

வாஷிங்டன்,

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சேனலான 'கார்ட்டூன் நெட்வொர்க்', கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அமெரிக்காவின் 'வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி' நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தொலைக்காட்சி சேனலாகும்.

இந்நிலையில், இந்த சேனல் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவலால் 90ஸ் கிட்ஸ்கள் சோகமடைந்துள்ளனர். மேலும், 'ஆர்ஐபி கார்ட்டூன் நெட்வொர்க்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. கடந்த வருடமும் இதேபோல சேனல் மூடப்படப்போவதாக வதந்தி பரவியது.

அதற்கு கார்டூன் நெட்வொர்க் சேனலே முற்றுப்புள்ளி வைத்தது. இது தொடர்பாக அதன் எக்ஸ் பக்கத்தில், ''நாங்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். எங்களுக்கு 30 வயதுதான் ஆகிறது. நாங்கள் எங்கும் செல்லப் போவதில்லை. கார்ட்டூன்களாக உங்கள் இல்லங்களில் நாங்கள் எப்போதும் இருப்போம்,' என பதிவிட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com