ராம் சரணுக்கு ஜோடியாகிறாரா சாரா அர்ஜுன்?

‘ரங்கஸ்தலம்’ படத்துக்கு பிறகு ராம் சரண் – சுகுமார் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது.
சாரா அர்ஜுன்
Published on: 

ஐதராபாத்,

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்க உள்ள புதிய படத்தில், சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரண் – சுகுமார்

ராம் சரண் நடிப்பில் சுகுமார் இயக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்சி17’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ரங்கஸ்தலம்’ படத்துக்கு பிறகு ராம் சரண் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சாரா அர்ஜுன்

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சாரா அர்ஜுனின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன், இப்படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனினும், அவர் இப்படத்தில் நடிப்பது குறித்து படக்குழு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com