பாலிவுட்டில் நுழையும் 'ஸ்டார்' பட நடிகை பிரீத்தி முகுந்தன்?

நடிகை பிரீத்தி முகுந்தன் பாலிவுட்டில் நுழையத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
பாலிவுட்டில் நுழையும்  'ஸ்டார்' பட நடிகை பிரீத்தி முகுந்தன்?
Published on

சென்னை,

‘ஸ்டார்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை பிரீத்தி முகுந்தன் பாலிவுட்டில் நுழையத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஹீரோ கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக நடிக்க பிரீத்திக்கு ஒரு பம்பர் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read
’ஒரு சகாப்தத்தின் முடிவு’ - 'விஜய்' குறித்து பேசிய பிரீத்தி முகுந்தன்
பாலிவுட்டில் நுழையும்  'ஸ்டார்' பட நடிகை பிரீத்தி முகுந்தன்?

தற்போது, கார்த்திக் ஆர்யன் கையில் 'நாக்ஜில்லா' , கபீர் கான் இயக்கும் படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களில் ஒன்றில் பிரீத்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Also Read
''கண்ணப்பா'' - '' நெமலியாகவே வாழ்ந்தேன் - பிரீத்தி முகுந்தன்
பாலிவுட்டில் நுழையும்  'ஸ்டார்' பட நடிகை பிரீத்தி முகுந்தன்?

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சர்வம் மாயா' படத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com