மகேஷ்பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மகேஷ்பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின்  ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா?
Published on: 

சென்னை,

படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை முழுமையாக முடிப்பதற்காக வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்ற படக்குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் ஓ.டி.டி. உரிமம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியீட்டுத் தேதி தள்ளிப்போக வாய்ப்பு?

‘வாரணாசி’ திரைப்படம் முதலில் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை முழுமையாக முடிப்பதற்காக வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்ற படக்குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூலை 29, ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகள் வெளியீட்டுக்கான சாத்தியமான தேதிகளாகக் கூறப்படுகின்றன. இருப்பினும், வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

ஓ.டி.டி. உரிமம் ரூ.450 கோடி?

இதற்கிடையே, இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.டி.டி. உரிமம் மூலம் ரூ.400 கோடி முதல் ரூ.450 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் மகேஷ்பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். பிருத்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ராஜமவுலியின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

X