பிரேம் குமார் இயக்கத்தில் உருவான ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு!

மெய்யழகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் உருவான ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு!
Published on

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படம் 'மெய்யழகன்'. இந்த படத்தினை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இதில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்திருந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பற்றி பேசும் இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2ம் பாகத்திதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மெய்யழகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதனை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com