ஜெய் நடித்துள்ள 'லேபில்' வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெய் நடித்துள்ள 'லேபில்' வெப் தொடரின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெய் நடித்துள்ள 'லேபில்' வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இந்த தொடரில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லேபில்' வெப் தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த வெப் தொடரின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'லேபில்' வெப்தொடர் நவம்பர் 10-ம்தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com