“ஜெயிலர் 2” படத்தின் “அல்ல பொலேலோ” வீடியோ பாடல் வெளியானது

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வருகிற நவம்பர் 12ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
“ஜெயிலர் 2” படத்தின் “அல்ல பொலேலோ” வீடியோ பாடல் வெளியானது
Published on: 

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல்ல பொலேலோ’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 15ந் தேதி தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

வசூல் வேட்டை

அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை மற்றும் நட்சத்திரங்களின் சிறப்புத் தோற்றங்கள் என பல அம்சங்களுடன் உருவான இப்படம் வெளியானது முதலே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பெற்ற இப்படம், உலகளவில் ரூ.825 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜெயிலர் 2’ இடம்பிடித்துள்ளது. அடுத்ததாக ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

பிரைம் வீடியோவில் வெளியாகிறது

‘ஜெயிலர் 2’ திரைப்படம், வருகிற நவம்பர் 12ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பாடல் வெளியானது

இந்நிலையில், ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல்ல பொலேலோ’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

X