இறுதி கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய்-சந்தீப் கிஷன் படம்

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இறுதி கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய்-சந்தீப் கிஷன் படம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இதில், நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார். கடந்த சில மாதங்களாக படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com