22 ஆண்டுகளை நிறைவு செய்த "ஜெயம்" திரைப்படம் : ரவி மோகனின் பதிவு

ரவி மோகன் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 ஆண்டுகளை நிறைவு செய்த "ஜெயம்" திரைப்படம் : ரவி மோகனின் பதிவு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, 'டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிகர் ரவிமோகன் நடிக்க உள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது.  மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'புரோ கோட்'  படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருப்பினும் ரவி மோகன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவி நடித்து ஹிட்டான "ஜெயம்" திரைப்படம் வெளியாகி 22 வருடம் ஆகிவிட்ட நிலையில், மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " ஜெயம் படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகும் நிலையில் கடவுளுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com